ரனில் விக்கிரமசிங்க தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முன்மொழிந்துள்ளது.
ஐ.தே.க செயற்குழு இன்று கூடியபோது இந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமர் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வேண்டுமென கட்சி கோரியுள்ளது.
ரணில் அடுத்த மாதம் எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கவிற்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் மட்டுமே பெற்றது.
இருப்பினும், கட்சிக்குள்ளான பல்வேறு கருத்துக்கள் காரணமாக, எந்த உறுப்பினரும் தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்கவில்லை.
கடந்த சில மாதங்களில், கட்சியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் முன்னாள் பிரதமரின் அனுபவத்தை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து நாடாளுமன்ற செயல்முறைக்கு பங்களிக்குமாறு கோரியுள்ளனர்.