யாழில் முடக்கப்பட்ட பகுதியிலிருந்து கழிவு வாய்க்கால் வழியாக வெளியேறும் கில்லாடிகள்: இன்று வசமாக சிக்கிய 5 பேர்!

Date:

நல்லூரடி, அரசடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விட்டு வெளியில் வந்த 5 இளைஞர்களை, 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறுயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி இளைஞர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வெளியில் சென்று வருகிறார்கள்.

வீதிகளில் பொலிசார் கடமையிலிருந்தாலும், அந்த பகுதிகளிலுள்ள கழிவு வாய்க்கால்கள் வழியாக வெளியேறுவதாக பிரதேசவாசிகள் தெரிவி்க்கின்றனர்.

இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்திய யாழ்ப்பாண பொலிசார், அந்த இடத்தைச் சேர்ந்த 5 பேரை யாழ்ப்பாணம் சிவன் கோயிலடியில் வைத்து இன்று அதிகாலை 4 மணிக்கு மடக்கிப் பிடித்தனர்.

அவர்கள் 5 பேரும் நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள பயணத் தடையை மீறி வீதியில் நின்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் ஐவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறி வந்திருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன், அவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஐவரும் இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் பிரதேசத்திலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பி அறிக்கை முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மேலதிக நீதிவான், சந்தேக நபர்கள் ஐவரையும் வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்