ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள அடுக்கு மாடிகட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் மோதலில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரும், தரையில் விழுந்த காட்சியை ஒருவர் படம்பிடித்து சக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
25 அடி உயரத்திலுள்ள இரண்டாவது தளத்தின் பல்கனியில் அவர்கள் மோதலில் ஈடுபட்ட போது, பல்கனி உடைந்து வீதியில் விழுந்தார்கள். இருவரும் ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஓல்கா வோல்கோவா மற்றும் யெவ்ஜெனி கார்லாகின் என்ற 35 வயதான தம்பதியின வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்பதியினர், கைகால்கள் உடைந்த நிலையில் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களிற்கு ஒரு மகன் உள்ளார்.
பல்கனியில் மோசமாக பொருத்தப்பட்டதா அல்லது சீர்குலைந்த நிலையில் உள்ளதா என்பதை அரசு வழக்கறிஞர் அலுவலகம் சோதித்து வருகிறது. அப்படி இனம் காணப்பட்டால் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





