27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிற்கு வேலைவாய்ப்பு: நேற்றைய ஸ்டாலின் பாணியை கையிலெடுத்த அங்கயன்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழகத்தில் கொரோனா சிகிச்சை நிலையமொன்றுக்கு சென்றது, சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகிய நிலையில், இன்று யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு அங்கஜன் இராமநாதன் சென்றுள்ளார்.

எனினும், கொரோனா சிகிச்சை விடுதிக்குள் நுழையாமல், வைத்தியர்கள் நோயாளிகளுடன் தொடர்புகொள்ள பயன்படுத்தும் ஒலிவாங்கி ஊடாக பேசினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகமாக இருந்தபோதும் இப்போது பயணத்தடை காரணமாக குறைந்து வருகிறது .

தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர்கள், ஒட்சிசன் தாங்கி தேவையாக உள்ளது. அவற்றை சுகாதார அமைச்சுடன் பேசி பெற்றுக் கொடுக்க நாம் முயற்சிகளை எடுக்கவுள்ளோம். ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் கொரோனா சிகிச்சைக்கான பணியாளர்களை உள்ளேடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தடுப்பூசி போடும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு தெரிவித்ததுடன் முதல் கட்ட 50,000 தடுப்பூசி போடப்பட்டு முடிவடைந்தால் அடுத்த கட்டமாக மேலும் 50,000 தடுப்பூசி அனுப்ப முடியும் என தெரிவித்திருந்தார்.

ஆகவே எவ்வளவு வேகமாக இந்த முதல்கட்ட தடுப்பூசியை நாம் போட்டு முடிக்கிறோமோ அந்தளவு விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கும்

குறிக்கப்பட்ட எல்லையில் 52 வீதமான மக்கள் நேற்று யாழில் கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

மக்களுக்கான தேவையற்ற பயத்தைப் போக்க தெளிவூட்டல்களை வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதியான நாங்கள் தெளிவூட்டல்களை செய்வதோடு அரச உத்தியோகத்தர்களும் அதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

முதல்கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு அடுத்த கட்ட தடுப்பூசி போடுவதற்கு 12 வார கால இடைவெளி உள்ளது. அந்த சீரான இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்படும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

east tamil

அரச வேலை வாய்ப்புக்கான புதிய ஆட்சேர்ப்பு திட்டம் – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

east tamil

இந்திய உயர் ஸ்தானிர் – மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

east tamil

Leave a Comment