கிளிநொச்சி, ஏ9 வீதியில் கொக்காவில் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் வேககட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (31) மாலை விபத்த இடம்பெற்றது,
ஏ9, வீதி வழியாக கிளிநொச்சி நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர், வாகனம் கொக்காவில் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் வாகன சாரதி உட்பட படுகாயமடைந்த ஏழு பேரும் மணலுக்குள் புதையுண்டு இருந்த நிலையில் வீதியால் பயணித்தவர்கள் அவர்களை மீட்டு நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சாரதி வாகனத்தை அதிவேகமாக செலுத்தியமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.