வியட்நாமில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு புதிய வகை கொரோனா காற்று மூலம் விரைவாக பரவுகிறது மற்றும் இது இந்தியா மற்றும் பிரிட்டிஷில் காணப்படும் புதிய வகை கொரோனாக்களின் கலவையாகும் என்று சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர்.
தொழில்துறை மண்டலங்கள் மற்றும் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரம் போன்ற பெரிய நகரங்கள் உட்பட, அதன் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் காணப்படும் இந்த புதிய வகை கொரோனாவை சமாளிக்க நாடு போராடி வருகிறது.
“இந்திய மற்றும் இங்கிலாந்து விகாரங்களில் இருந்து ஒரு புதிய கலப்பின மாறுபாட்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்” என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் நுயேன் தன் லாங் தொற்றுநோய்க்கான ஒரு தேசிய கூட்டத்தில் நேற்று தெரிவித்தார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“இந்த விகாரத்தின் சிறப்பியல்பு என்னவென்றால், அது காற்றில் விரைவாக பரவுகிறது. தொண்டை திரவத்தில் வைரஸின் செறிவு வேகமாக அதிகரிக்கிறது மற்றும் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு மிகவும் வலுவாக பரவுகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த புதிய மாறுபாட்டில் பதிவுசெய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை.
லாங் அறிவிப்புக்கு முன்னர் வியட்நாமில் ஏழு அறியப்பட்ட கொரோனா வைரஸ் வகைகள் இருந்தன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.