‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகம் உருவாகிறது ; உறுதி செய்த இயக்குனர்!

Date:

மரகத நாணயம் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் உறுதி செய்துள்ளார்.

2017-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஏஆர்கே சரவணன். விமர்சன ரீதியாக பல பாராட்டுக்களைப் பெற்ற இபபடத்தின் மூலம் சரவணன் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றார்.

தற்போது மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை சரவணன் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “மரகத நாணயம் இரண்டாம் பாகத்திற்க்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன்..

அதற்கு முன்பு.. சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை துவுங்கவுள்ளேன்..இவற்றையெல்லாம் விட.. கொரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் வேண்டுதல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டாம் பாகத்தில் ஆதி உள்ளிட்ட முதல் பாகத்தின் குழுவினர் இடம் பெறுவார்களா? இல்லை வேறொரு குழுவுடன் உருவாக உள்ளதா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.சரவணன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கவிருக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

காதலியுடன் ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு...

பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும்...

அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தைக்காக பாக். தலைநகரில் 2 நாட்கள் விடுமுறை!

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்