பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

Date:

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும் அவரது 20 வயது மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பான்டின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர்கள், நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதன்போதே இருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க தாயும், அவரது 20 வயது மகளும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பிரான்ஸ் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே மரணத்திற்கான அதிகாரப்பூர்வமான காரணம் தெரியவரும்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்