வடமாகாணத்தில் மேலும் 143 பேருக்கு நேற்று (29) கொரோனா தொற்று உறுதியானது.
யாழ்ப்பாண பல்கலைகழகம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் நேற்று 928 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில்
யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், மானிப்பாய் வைத்தியசாலையில் 4 பேர், அளவெட்டி வைத்தியசாலையில் 3 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் 5 பேர், சங்கானை வைத்தியசாலையில் ஒருவர், பண்டத்தரிப்பு வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர்,
வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், வவுனியா வைத்தியசாலையில் 8 பேர், புளியங்குளம் வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், மாங்குளம் வைத்தியசாலையில் 3 பேர், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.