‘துருவங்கள் 16’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ளனர்.
பைனான்ஸ் சிக்கலால், இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இப்போது அனைத்து பிரச்சினைகளும் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போது, ‘நரகாசூரன்’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படம் மட்டுமன்றி ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட 10 படங்களை சோனி லைவ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1