கேரளாவில் சிறந்த கவிஞர்களுக்கு வழங்கப்படும் ஓஎன்வி விருது இந்த ஆண்டு வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு ஆளாக ஒருவருக்கு எவ்வாறு இந்த விருது அளிக்கப்படுகிறது என பாடகி சின்மயி, நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட பல பெண்ணியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விருது வழங்குவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் வைரமுத்து கொடுக்கப்பட இருந்த விருதை மறு பரிசீலனை செய்ய உள்ளதாக ஓஎன்வி அகாடமி நேற்று அறிவித்தது.
இதையடுத்து தனது அளிக்கப்படவிருந்த விருதை ஓஎன்பிக்கே திருப்பி அளிக்கிறேன் என வைரமுத்து இன்று அறிவித்தார். இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அவர், விருது வழங்குவதை மறுபரிசீலனை என கூறுவது என்னையும், கவிஞர் ஓஎன்பியையும் சிறுமைப்படுத்துவதாக நினைக்கிறேன். சர்ச்சைக்கிடையே இந்த விருதை தவிர்க்கவே விரும்புகிறேன். நான் உண்மையானவாக இருப்பதால் விருதை ஓஎன்பிக்கே திருப்பி அளிக்கிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி, இது குறித்து கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உங்கள் தந்தை மற்றும் தாய் மீது ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுகளை வைக்கும்போது, உங்கள் பெற்றோர் அதை மறுத்தால் நீங்கள் யாரை நம்புவீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். நான் எனது தந்தையை நம்புகிறேன். அவர்கள் பக்கம் உண்மை இருந்தால் அதை சட்டப்படியாக சந்திக்கட்டும் என காட்டமாக தெரித்துள்ளார்.