தடுப்பூசியுடன் வரும் அரசியல் பிரமுகர்கள்!

Date:

யாழ் மாவட்டத்தில் COVID -19 தடுப்பூசி இன்று வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பிரமுகர்களின் பிரசன்னமும் அதிகமாக காணப்பட்டது.

அரசின் வடக்கு பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாததன் போன்றவர்களுடன், அமைச்சர் நாமல் ராஜபக்சவும் தடுப்பூசி தொடர்பான இடங்களிற்கு சென்றார்.

யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன்குளம் மகாமாரியம்மன் திருமண மண்டபத்திற்கும், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கும், கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை கரவெட்டி பகுதிகளில் தடுப்பூசி நிலையங்களுக்கும் நாமல் சென்றார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்,

யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் மேற்படி தடுப்பூசி அடுத்த கட்டம் வழங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகளைப் விரைவாக மக்களுக்கு விநியோகிக்கவும்.

இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காத விடத்து அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.

எனவே உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களினை அதிகரித்து மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.

பொலீஸ் இராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து விரைவில் அரசினால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட 50,000 தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்குமாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்

இதன் போது வடமாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் சுகாதார உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்