தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜய் டிவி அறந்தாங்கி நிஷா!

Date:

பிக் பாஸ் புகழ் அறந்தாங்கி நிஷா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார். யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியில் ஸ்டாண்டப் காமெடியனாக ஆண்கள் மட்டுமே அதிகம் அந்த காலத்தில், பெண்களும் காமெடியில் கலக்கலாம் என நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. அவரது காமெடியான பேச்சுக்கு ரசிகர்கள் அதிகம்.

அவர் விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில் கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவர் சரியாக விளையாடவில்லை என ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். அதை கமல்ஹாசன் நேரிடியாக நிஷாவிடம் கூறினார். அவர் ரியோவுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டுவிட்டார்.

பிக் பாஸுக்கு பிறகு நிஷா தற்போது டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். பிக் பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் ஷோவில் அவர் பங்கேற்று வருகிறார். அந்த ஷோ கொரோனா லாக் டவுன் காரணாமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் அறந்தாங்கி நிஷா தாடி பாலாஜி உடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது அறந்தாங்கி நிஷா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார். அதன் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

“COVISHIELD தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நல்ல அணுகுமுறை தெளிவான விளக்கத்தோடு ஊசி போட்ட செவிலியர்களுக்கு நன்றி. சரியான விளக்கம் அங்க கொடுக்கிறாங்க யாரும் பயப்பட வேணாம் நன்றி” என நிஷா குறிப்பிட்டு உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்