இரண்டு நாட்களாக தோட்டத்தில் தஞ்சம் புகுந்த காட்டு யானை அட்டகாசம் : மாமரங்களை சேதப்படுத்தி அட்டகாசம்!

Date:

தோலம்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வரும் நிலையில் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல்பாவி, ஊக்கையனூர் ஆகிய பகுதியல் ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு வாரமாக அங்கு உலா வருவதாகவும் அருகில் உள்ள தோட்ட பகுதிக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு தோலம்பாளையத்தை தெற்கு பகுதியை சேர்ந்த காரையன் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த மாமரங்களின் கிளைகளை ஒடித்தும் மாங்காய்களை பறித்தும் மிகுந்த சேதத்தை உண்டாக்கியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக யானை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் காட்டு யானைகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்