வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயதான நபர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று மரணமடைந்துள்ளார்.
ஶ்ரீராமபுரத்தை சேர்ந்த நடேசன் பாலசந்திரன் (65) சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
2
+1