யுவன் குரலில் மனதை மயக்கும் ஏ ராசா பாடல் ‘மாமனிதன்’ படத்திலிருந்து வெளியீடு!(வீடியோ இணைப்பு)

Date:

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் படம் இது.

முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் ஏ ராசா என்னும் இரண்டாவது பாடலை (மே 28) இன்று வெளியிட இருப்பதாக இசையமைப்பாளர் அறிவித்திருந்தார் .

இந்நிலையில் தற்போது மாமனிதன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக ஏ..ராசா பாடல் யுவன்ஷங்கர் ராஜாவின் குரலில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வீடியோவில் யுவன்ஷங்கர்ராஜா பசுமையான மலைப் பகுதிகளில் நடந்தபடியே பாடும் அந்த வீடியோ காட்சியும் பார்ப்பவர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி

சமீப காலங்களில் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சில அரசியல்வாதிகள்...

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்