மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி நகைகளை கொள்ளையடித்த கொடூரனை அடித்தே கொலை செய்த கிராமத்தினர்!

Date:

சித்தூர் அருகே 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி நகைகளை கொள்ளையடித்த நபரை கிராம மக்கள் அடித்து கொலை செய்தனர்.

ஆந்திர மாநிலம் அப்பிகானிபள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரை அதே ஊரை சேர்ந்த மூர்த்தி என்பவர் மூதாட்டி தனியாக இருந்தபோது வீடு புகுந்து கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த 4 சவரன் ஆபரணங்களை பறித்துக்கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்.

இதனால் படுகாயமடைந்த மூதாட்டி துடித்து கொண்டு இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் கவனித்து கிராம மக்களுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த கிராம மக்கள் மூதாட்டியை சிகிச்சைக்காக புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆவேசமடைந்த கிராம மக்கள் வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை பிடித்து இழுத்து வந்து அடித்து கொலை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த புங்கனூர் போலீசார் விரைந்து சென்று மரணமடைந்த மூர்த்தி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...

டெங்கு அபாயத்திலிருந்து மீள்கிறது கொழும்பு பல்கலைக்கழக அழகியல் பீடம்

டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை...

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்