பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாயொருவர் பிரசவித்த குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுடன் அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவமானது.
பிரசவித்த குழந்தைக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, அண்மையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் தற்போது 21 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்




