ஒவ்வொருவரின் வாழ்க்கையின் இரண்டாம் பகுதியில் அடியெடுத்து வைப்பது தான் திருமண வாழ்க்கை. அதிலும் ஒரு பெண் தான் இருக்கும் வீட்டிலிருந்து வேறொரு வீட்டுக்கு சென்று வாழ்வது என புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறாள். அங்கு அவளின் முதல் உறுதுணையாக இருப்பது வாழ்க்கை துணையான கணவன் தான். கணவன் வீட்டில் மற்ற நபர்கள் எப்படி இருந்தாலும், கணவன் யாருக்காகவும் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பதும், மனைவியின் மனதை புரிந்து கொண்டு வாழ்வதென ஒரு கணவன் அமைந்து விட்டால் அந்த பெண் வாழ்வில் பெரியளவில் நிம்மதி அடைவாள்.
திருமணத்தில் மிக சிறந்த கணவனாக இருக்கும் நபர்கள் எந்த ராசியினர் என்பதை ஜோதிடத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
திருமணம் உள்ளிட்ட குடும்ப இன்பம் ஆகிய முக்கியமான விஷயங்களுக்கு காரணமாக சுக்கிர பகவான் பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட சுக்கிரன் ஆளக்கூடிய ராசியான ரிஷப ராசியினர் மிகவும் விசுவாசமானவர்கள். மனைவியை மிகவும் நேசிக்கக்கூடிய இவர்கள் ஒருபோதும் ஏமாற்றும் சிந்தனை அற்றவர்கள்.
ரிஷப ராசியினரை திருமணம் செய்தால் அந்த பெண்ணை அந்த ஆண் கண் இமையில் வைத்து காப்பான். உங்கள் எல்லா தேவைகளையும் அறிந்து கவனித்துக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பார். நிறைய விசுவாசமும், அதீத காதலும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மீனம்
மீன ராசியை சேர்ந்த ஆண்கள் தங்கள் திருமண வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்புவார்கள். எப்போதும் தங்கள் மனைவியிடம் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார்கள். இந்த ராசி ஆண்கள் மனைவி மீது மிகுந்த விருப்பம் கொண்டவர்களாகவும், அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள்.
மீன ராசி ஆண்கள் தங்கள் துணையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிதி சுதந்திரம் அளிப்பார்கள் மற்றும் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துவார்கள். காதலில் இருக்கும் போது தன் காதலியை கண்ணும், கருத்துமாக கவனிப்பதோடு, ஒரு போதும் துரோகம் செய்யமாட்டார்கள்.
கடகம்
மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திரன் ஆளக்கூடிய ராசி தான் கடகம். இந்த ராசியை சேர்ந்த ஆண்கள் தங்களின் அன்புக்குரியவருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள். இவர்கள் வேலையில் சிறிது ஓய்வு கிடைக்கும் போது வெளியே சுற்ற செல்லாமல், தன் துணையுடன் நேரத்தை செலவிட விரும்புவார்கள்.மிகவும் கனிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும், ஒரு நல்ல தந்தையின் அனைத்து குணங்களும் கடக ராசி ஆண்களிடம் உள்ளன.
தனுசு
தனுசு ராசி ஆண்கள் தங்களின் மனைவியின் மனதை உணர்ந்து செயல்படுவார்கள். தன்னைப் போல தன் மனைவியிடம் லட்சியத்தை அடைய முயற்சிக்கும் போது உறுதுணையாக இருப்பார்கள். காதலில் மிகுந்த நம்பகத்தன்மை உடையவர்களாக இருப்பார்கள்.
திருமண வாழ்க்கையில் தன் துணையை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். தன் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். கருத்து வேறுபாடு வந்தாலும் உடனே மீண்டும் சுமூகமடைந்து விடுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர் மிகவும் சுறுசுறுப்பானவர்களாகக் கருதப்படுகிறார்கள். மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிந்தவரை தங்களால் இயன்ற எல்லா செயல்களையும் செய்வார்கள். இவர்கள் நல்ல கணவனாக இருப்பது மட்டுமல்லாமல், மனைவிக்கு நல்ல நண்பனாக இருப்பார்கள்.
எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க விரும்புவார்கள். தன் மனைவி குடும்பத்திலும், மனைவியின் தொழிலில் முன்னேற்றம் கான கடினமாக முயல்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் எப்போதும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள். எந்த ஒரு மனக்கசப்பான சூழல் அல்லது, உணர்ச்சிவசப்படுகின்ற நிலையாக இருந்தாலும், அதிலிருந்து விரைவில் மீண்டும் சுமூகமடைவார்கள். தன் துணையை கலங்க வைக்காமல் மோசமான நிலையிலிருந்து மீட்டு மன தைரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுப்பார்கள்.