26.4 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

வாகரையில் பயறு அறுவடை விழா!

ஜனாதிபதியின் எண்ணக் கருவில் உருவாகிய சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கிய நிகழ்ச்சி திட்டத்தின் இறக்குமதி விவசாய தானியப் பயிர் செய்கை மூலம் செய்கை பண்ணப்பட்ட பயறு அறுவடை விழா மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கதிரவெளியில் இடம்பெற்றது.

வாகரை பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 300 ஏக்கரில் மேற்குறித்த இறக்குமதி தானியப் பயிர் செய்கையில் ஒன்றான பயறு செய்கை பண்ணப்பட்டது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குரிய அபிவிருத்தி குழு பிரதித் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளருமான பரமசிவம் சந்திரகுமார் ஆரம்பித்து வைத்தார்.

வாகரை பிரதேச மானது யுத்தம் மற்றும் சுனாமி போன்றவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்ட பிரதேசமாக காணப்பட்ட நிலையினை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக இத்திட்டம் வாகரையில் மேற்கொள்ளப்பட்டதாக அபிவிருத்தி குழுத் பிரதித் தலைவர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் குறித்த பயிர் செய்கையில் தன்னிறைவு கண்டு ஜனாதிபதியின் எண்ணத்தை நிறைவேற்றி, வெற்றியும் கண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

குறித்த திட்டமானது நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் வாகரையிலும் அபிவிருத்தி குழு பிரதித் தலைவர் பரமசிவம் சந்திரகுமாரின் வழிகாட்டலில் சோலை விவசாய உற்பத்தியாளர் சம்மேளத்தின் நெறிப்படுத்தலில் குறித்த தானியப்பயிர் செய்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பிரதேச மக்கள் நன்மை அடைந்துள்ளதாகவும் தங்களுக்கு உதவிய ஜனதிபதி மற்றும் அபிவிருத்தி குழுத்தலைவருக்கு தமது நன்றியை தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment