மட்டக்களப்பில் திகில் சம்பவம்: இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை!

Date:

மட்டக்களப்பு, ஆயித்தியமலையில் கசிப்பு வாங்கச் சென்றவரின் தலைகவசம் காணாமல் போன பிரச்சினை ஒன்றில் குடும்ப பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (26) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை உன்னிச்சை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த பெண்ணின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்களான இருவர் மோட்டர் சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு அதில் தலைகவசத்தை வைத்துவிட்டு கசிப்பு வாங்க சென்றுள்ள நிலையில் கசிப்பு இல்லை என்பதால் திரும்பியபோது மோட்டர் சைக்கிளில் இருந்த தலைகசம் காணாமல் போயுள்ளது

இந்த நிலையில் கசிப்பு வாங்கச் சென்றவருக்கும் குறித்த பெண்ணுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் திரும்பிச் சென்றபோது அவர்களை வழிமறித்து அவர்கள்மீது குறித்த பெண்ணின் மகன் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதனையடுத்து கசிப்பு வாங்க சென்று தாக்குதலுக்கு இலக்கானவர் மகனுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தலைகவசம் காணாமல் போனது மற்றும் தாக்குதல் நடாத்தியது தொடர்பாக முறைப்பாடு செய்துவிட்டு இரவு 12.30 மணியவில் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு தந்தையும் மகனும் சென்று குறித்த பெண்மீது கம்பியால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து படுகாயமடைந்த குறித்த பெண் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தாக்குதல் நடாத்திய இருவர் மீது பெண்ணின் உறுவினர்கள் கத்திகுத்து தாக்குதல் நடாத்தியதில் 60 வயதுடையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாகவும் இரு குடும்பங்களுக்குமிடையே நீண்டகாலமாக சண்டை இடம்பெற்றுவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தடவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்