தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சிக்கினார்!

Date:

கொழும்பு கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் 19 தொற்றாளர் தமன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்ட பின்னர் கடந்த 25 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் தற்போதைய நிலையில் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பசில் ராஜபக்ஷவிற்கு பிடியாணை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி...

காந்தியச் சிந்தனைகள் இலங்கையின் இன முரண்பாடுகளுக்குத் தீர்வுகாண உதவும் – பேராசிரியர் எம்.எம். பாஸில்

இலங்கையின் போருக்குப் பின்னரான இன முரண்பாடுகளுக்குத் தீர்வுகண்டு, நிலையான சமாதானத்தையும் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்