மன வேதனையில் இருந்த விஜய் சேதுபதி புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில் ஆசிரமத்திற்கு சென்று நேரம் செலவிட்டாராம். இந்நிலையில் அவர் தோட்டத்தில் மாங்காய் பறிக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் படுபிசியான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். இது போதாது என்று சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் ஷெஃப் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகி வைரலானது.
கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடையும் முன்பு அவர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசனுடன் சேர்ந்து லாபம் படத்தில் நடித்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜனநாதன் உடல்நலக்குறைவால் காலமானார்.
தன் குருவான ஜனநாதன் இறந்த கவலையில் இருந்திருக்கிறார் விஜய் சேதுபதி. மன அமைதி இல்லாமல் இருந்ததால் புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில் ஆசிரமத்திற்கு சென்று நேரம் செலவிட்டாராம்.
இந்நிலையில் தோட்டத்தில் விஜய் சேதுபதி மாங்காய் பறித்து அதை தன் நண்பனை நோக்கி தூக்கிப் போடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. லாக்டவுனால் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. அதனால் விஜய் சேதுபதி ஓய்வில் இருக்கிறார்.
தாடியும், மீசையுமாக இருக்கும் விஜய் சேதுபதி இப்படி ரிலாக்ஸாக மாங்காய் பறித்து விளையாடியதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
#MakkalSelvan #VijaySethupathi Mango 💛#lockdown2021@VijaySethuOffl pic.twitter.com/fccyZUn10S
— VijaySethupathi Fans (@Vspfans) May 26, 2021
இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டதும் அவர் ஓகே சொல்லவில்லை. கை நிறைய படங்கள் இருக்கும்போது விக்ரமுக்கு டேட்ஸ் கொடுக்க முடியுமா என்று யோசித்தார். பின்னர் கமல், லோகேஷுக்கு இல்லாத டேட்ஸா என்று நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகியிருக்கும் விஜய் சேதுபதி பணத்தாசையில் தான் மேலும் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார் என்று பேச்சு கிளம்பியது. அதற்கு அவரோ, நான் ஒருபோதும் பணத்தின் பின்னால் ஓடியது இல்லை. என் ரசிகர்களை மகிழ்விக்கவே உழைக்கிறேன் என்றார்.