தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படி தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா நேற்று அவரது இல்லத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார்.
தேனி – அல்லிநகரம் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் தேனி என்.ஆர்.டி.நகரில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரடியாக சென்று கோவிஷீல்டு (முதல் டோஸ்) செலுத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1