26.3 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இந்தியா

லட்சத்தீவை கைப்பற்றும் பாஜக!

இந்தியாவின் மிக சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவு அழகிய கடற்கரை , இயற்கை எழில் மரங்கள், சுத்தமான காற்று, பல பிரபலங்களின் சொர்க்கபூமி என தனக்கென தனித்துவத்தை கொண்டுள்ளது.

மீன்பிடித் தொழிலும், சுற்றுலாவும் இங்கு பிரதான தொழிலாக இருக்கிறது. லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லட்சத்தீவுகளின் நிர்வாகியாக இருந்த தினேஷ்வா் சா்மா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் காலமானாா்.

அதனையடுத்து, இந்திய அரசு புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேல் என்பவரை லட்சத்தீவின் நிர்வாகியாக நியமித்தது. இதற்கு முன்புவரை லட்சத்தீவின் நிர்வாகியாக ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்.கள் மட்டுமே நியமிக்கப்பட்ட நிலையில், ஒரு அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து அவர் கொண்டுவந்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் அந்த ஊர் மக்களைப் பெரிதும் கவலையடையச் செய்திருக்கிறது.

லட்சத்தீவுகளின் முந்தைய நிலவுரிமை சட்டத்தின்படி லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறப்பவர் மட்டுமே தீவுகளில் நிலம் வாங்க முடியும் எனும் உத்தரவு தளர்த்தப்பட்டு தற்போது யார் இங்கு வேண்டுமானாலும் இங்கு இடம் வழிவகை செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்ட லட்சத்தீவுகளின் பிரதான உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றுக்கு தடை விதிப்பதற்கான முன்னெடுப்புகள் லட்சத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் இதுவரை மதுபானங்களுக்கு தடை நிலவிவந்த நிலையில் தற்போது, மதுபான விற்பனையை தொடங்க முடிவெடுத்துள்ளது புதிய அரசு. முஸ்லிம்கள் வாழும் இந்த தீவில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தப் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திரைபிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை லட்சத்தீவு காப்பாற்றப்பட வேண்டும் என குரல் எலிப்பி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment