24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இந்தியா

பாபா ராம்தேவ் மீது ரூ.1000 கோடி அவதூறு வழக்கு; இந்திய மருத்துவ சங்கம் அதிரடி!

நவீன மருத்துவ முறை குறித்து அவதூறாக பேசியதற்காக பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அலோபதி நவீன மருத்துவ முறை முட்டாள்தனமானது எனவும், தோல்வியடைந்தது எனவும்
பாபா ராம்தேவ் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்து, பாபா ராம்தேவ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் வலியுறுத்தியது.

இதைத்தொடர்ந்து, பாபா ராம்தேவ் தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டுமென அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவுறித்தினார். பின்னர், இந்திய மருத்துவ சங்கத்துக்கு பாபா ராம்தேவ் 25 கேள்விகளை முன்வைத்தார். அதில், அலோபதி மருத்துவ முறையால் நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அலோபதி மருத்துவ முறை மற்றும் அலோபதி மருத்துவர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், பாபா ராம்தேவ் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், தவறினால் 1000 கோடி ரூபாய் இழப்பீடு கோரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவின் பேச்சு இந்திய மருத்துவ சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அலோபதி மருத்துவ முறை மற்றும் சங்கத்தை சேர்ந்த 2000 மருத்துவர்களை அவமதிப்பதாகவும் இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 கீழ் பாபா ராம்தேவின் பேச்சு குற்றச் செயல் எனவும் இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, 15 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் 1000 கோடி ரூபாய் இழப்பீடு கோரப்படும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் கிட் விளம்பரங்கள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இருப்பதால் அவற்றை வாபஸ் பெற வேண்டுமெனவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment