24.5 C
Jaffna
March 9, 2025
Pagetamil
குற்றம்

தனியார் வங்கியில் 910 மில்லியன் சுருட்டியவர் கைது!

மகரகமவிலுள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான 910 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான அந்த வங்கியின் முன்னாள் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

இந்த நிதி மோசடி சம்பவம் 2017-2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் வைப்பு செய்த பணத்தை அவர் திருடியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்தார்.

எனினும் சந்தேக நபர் நேற்றைய தினம் பிபிலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரை நுகேகொடை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ஜூன் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!