இயக்குனர் பாண்டியராஜ் தற்போது தான் இயக்கி வரும் ‘சூர்யா 40’ திரைப்படம் குறித்த சில முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெட் வேகத்தில் பயணிக்கும் சூர்யாவின் திரை வாழ்வில், அவரின் 40 வது திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தற்போது படக்குழுவினரிடையேயான கலந்துரையாடலின் போது பேசியுள்ள ஆடியோ க்ளிப் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய ‘சூர்யா 40’ படக்குழுவினர், திரைப்படம் குறித்த சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் எவ்வாறு அவரது ரசிகர்களுக்கு சிறப்பான படமாக அமைந்ததோ அதேபோல இந்த படமும் சூர்யா ரசிகர்களுக்கு அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கார்த்தி ரசிகர்களை போல சூர்யா ரசிகர்களும் இதில் ஒவ்வொரு மொமண்டையும் என்ஜாய் பண்ணுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் டைட்டில் லுக் தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் தனியாக கவனம் செலுத்தி, டைம் எடுத்து பண்ணிக் கொண்டிருக்கிறோம். தற்போது கார்த்தி சார் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டபோது கூட பலரும் சூர்யா சார் படத்துக்கான அப்டேட்டுகளை வரிசைகட்டி கேட்டனர்! என்று மகிழ்வுடன் பேசியுள்ளார் இயக்குனர் பாண்டியராஜ்.
‘சூர்யா 40’ திரைப்படத்தை முடித்ததும் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் நடிகர் சூர்யா கெளதம் வாசுதேவ் இயக்கம் ‘நவரசா’ எனும் வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.