அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஒரு வருட நினைவஞ்சலி!

Date:

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஒருவருட நினைவையொட்டி இறக்குவானையில் அமைந்துள்ள சாந்தி சிறுவர் இல்லத்தில் வாழும் மாணவிகளுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் அவர்களின் பூரண அனுசரணையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய பெருந்தோட்ட தொடர்பாடல் உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்தின் செயலாளர் ஏ.பரமேஷ்வரன், கொடகவெல பிரதேச செயலாளர் சார்பாக எஸ்.ஜெயகுமார், ஆசிரியர்களான எஸ்.சுவர்ணலதா, வாசுதேவன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட கமிட்டி தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

சுமார் 40 தமிழ் மாணவிகளைக் கொண்ட இச் சிறுவர் இல்லம் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குறிய ஓமல்பே சோபித்த தேரரின் முயற்சியில் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்