காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 81 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பொதுசுகாதார பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, நாவற்குடா பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிலுள்ள தனிமைப்படுத்தப்பட்டிருந்த 16 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் போதும் ஆறு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் ஈடுபட்டனர்.