திடீரென வீதியில் ஏற்பட்ட பள்ளம்: நீர்த்தேக்கத்திற்கு ஆபத்தில்லை!

Date:

கொத்மலை நீர்தேக்கத்தின் ஊடாக செல்லும் பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளது.

6 அடி ஆழத்திற்கு வீதி தாழிறங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கொத்மலை நீர் தேக்க அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தாழிறங்கிய பகுதியை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்படும் வரை நீர்தேக்கத்தின் மேல் அமைந்துள்ள வீதியில் வாகன போக்குவரத்திற்கு அனுமதியில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த அனர்த்தம் தொடர்பில் பெருந்தெருக்கல் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உரிய நடவடிக்கை எடுப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று (26) குழி ஏற்பட்டுள்ள பகுதியை கண்காணிக்க சென்ற ஜீவன், அங்கிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டனை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நிலைமையை எடுத்து கூறியுள்ளார்.

இவ்வாறு தெளிவுப்படுத்திய போதே அமைச்சர் மேற்படி விடயத்தை தன்னிடம் கூறியதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் டிரஸ்ட் நிறுவன பணிப்பாளர் பரத் அருள்சாமி, பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

எவ்வாறாயினும் இதனால் கொத்மலை நீர் தேக்க அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என நீர்தேக்க பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

க.கிஷாந்தன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...

போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்