சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம்தான் தற்போதைய Hot Topic. ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் இசைப்புயல் ரஹ்மான் அவர்கள் கூட அந்த பள்ளியில் தான் 9 – ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் ரஹ்மான் அவர்கள் நேர்க்காணகில் இந்த பள்ளி குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஹ்மான் கூறியிருப்பதாவது, “என் தந்தை இறந்த பிறகு நானும், என் தாயும் பள்ளிக்கு சென்றோம். அப்போது என் அம்மாவிடம் பள்ளி நிர்வாகத்தினர்,
உங்கள் பையனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கம் சென்று தெருதெருவாக மியூசிக் போட்டு அலைந்தீர்கள் என்றால், யாரவது பணம் கொடுப்பார்கள்” என்று பத்மா சேஷாத்திரி பள்ளியில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார் ரஹ்மான்.
தொடர்ந்து நடிகை சுஹாசினி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஏ. ஆர் ரஹ்மான், “பத்ம சேஷாத்ரி பள்ளியிலிருந்து பாதியிலே நின்று விட்டேன். நிறைய நல்லது மற்றும் கெட்ட அனுபவங்கள் அந்த பள்ளி எனக்கு தந்துள்ளது” என்று ஓப்பனாக கூறியுள்ளார்.
#ARRahman 🔥🔥 pic.twitter.com/ULV4YjwPur
— JD (@mastervijay2020) May 25, 2021