பூனேவில் வசித்து வரும் பிரபல மராத்தி நடிகை சோனாலி குல்கர்னி வீட்டில் இன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு நபர், அவருக்கு சுமார் 25 வயது இருக்கும், கையில் ஒரு கத்தி மற்றும் பொம்மை துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அவரை பிடிக்க நடிகையின் அப்பா முயற்சி செய்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
Pimpri Chinchwad பகுதியில் இருக்கும் நடிகை குல்கர்னயின் வீட்டில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
அந்த நபரை போலீசார் தற்போது கைது செய்து இருக்கின்றனர். அவர் நடிகையின் தீவர ரசிகராக இருக்கலாம் என போலீசார் நினைக்கின்றனர். மேலும் அந்த நபர் என்ன குறிக்கோளுடன் அங்கு சென்றார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் பற்றி கூறிய போலீசார், ‘செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அந்த நபர் அபார்ட்மெண்டின் மாடிக்கு சென்றிருக்கிறார். வீட்டின் பணியாளர் அந்த நபரை பார்த்துவிட்ட நிலையில் தன்னை போலீஸ் தேடுகிறது அதனால் ஒளிந்துகொள்ள இடம் வேண்டும் என தெரிவித்தாராம்.
அதன் பின் அவரை பிடிக்க நடிகையின் அப்பா முயற்சி செய்திருக்கிறார், ஆனால் அந்த நபர் தப்பி சென்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் வேகமாக சுற்றிவளைத்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர்.
தற்போது நடிகை சோனாலி துபாயில் அவரது கணவருடன் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.