ஜூலியா எனும் பெண் தனது ஒன்லைன் டேட்டிங் அனுபவத்தை டிக்-டாக் வீடியோவில் பதிவிட்டிருந்தார். திடீரென மாயமான அந்த நபர், சிறையில் இருப்பதை அறிந்திருக்கிறார் ஜூலியா. பிறகு, அவரும் காணும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்…
நாம் சினிமாவில் நிறைய காதல் கதைகள் பார்த்திருக்கிறோம், பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல் என வகை வகையாக காதல் காவியங்களை கண்முன் காட்டியிருக்கிறது உலக சினிமா. ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யா தனது காதலுக்காக சென்னையில் இருந்து அமெரிக்கா வரை செல்வார்.
காதலுக்காக ஒரு நபர் அதிகபட்சம் எந்த எல்லை வரை செல்ல முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? அமெரிக்கா வரை செல்வதே கடினம் என்பதை நாமும் அறிவோம். ஆனால் சிறைக்கு யாரேனும் செல்வார்களா? ஆம், தனது ஆன்லைன் காதலுக்காக ஒரு இளம்பெண் சிறை வரை சென்றுள்ளார்.
ஜூலியா எனும் பெண் டிக்-டாக் வீடியோவில் தனது காதல் அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில், தனது ஒன்லைன் காதலன் சிறையில் இருப்பதை அறிந்து, அவரை நேரில் காண சிறை வரை சென்ற அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் ஜூலியா.
“அப்போது நான் ஹை ஸ்கூல் படித்து வந்தேன். மூன்று மாத காலம் அந்த நபருடன் பேசி வந்தேன். பிறகு ஒரு நாள் அந்த ஆண் மாயமாக மறைந்து போனார். அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரது பிரிவு என்னை மிகவும் காயப்படுத்தியது. நான், அவரது நணபர்கள் அனைவருக்கும் மெசேஜ் செய்து விபரங்கள் சேகரித்தேன்.” என கூறுகிறார் ஜூலியா.
அப்போது தான் எனக்கு ஜூலியாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஒன்லைனில் டேட்டிங் செய்து வந்த அந்த நபர் ஜெயிலில் இருப்பதை அறிந்தார் ஜூலியா.அதன் பிறகு, தனது பள்ளியில் இயங்கி வந்த Law Societyல் தன்னை இணைத்துக் கொண்டார் ஜூலியான. இதன் காரணமாக, அவர்கள் சிறை சார்ந்த பயிற்சி பயணங்கள் மேற்கொள்ளும் போது, சிறையில் இருக்கும் அந்த நபரை காணும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார் ஜூலியா.
ஹை-ஸ்கூல் காலத்தில் இவ்வாறு செய்து வந்தது நிச்சயம் முட்டாள்தனமான காரியம் என கூறும் ஜூலியா. தான் சேர்ந்திருந்த சட்ட குழு லோக்கல் கவுண்டி சிறைச்சாலைக்கு கல்வி சார்ந்த பயணம் மேற்கொண்ட போது, அவரும் பயணத்தில் இணைந்திருக்கிறார். பள்ளி சட்ட குழுவினர் மேற்கொள்ளும் எல்லா சிறைச் சாலை பயிற்சி வகுப்புகளிலும் ஜூலியா கலந்துக் கொண்டு, தன்னுடன் டேட்டிங் செய்த அந்த நபரை தேடி சென்றிருக்கிறார்.
ஜூலியாவின் வீடியோ பதிவில், பல நெட்டிசன்கள், ஜூலியா டேட் செய்து வந்த அந்த நபரை கண்டரா இல்லையா என ஆச்சரியத்துடன் கேள்விகள் எழுப்ப துவங்கினார்கள்.
“தனது விருப்பத்திற்குரிய அந்த நபரை காண்பதற்காக தான் நான் சிறைச்சாலைகளுக்கு செல்ல துவங்கினேன். ஆனால், சிறைச்சாலையில், பெண் மாணவிகளை பெண் சிறைவாசிகள் இருக்கும் இடத்திற்கும், ஆண் மாணவர்களை ஆண் சிறைவாசிகள் இருக்கும் இடத்திற்கும் என பிரித்து அனுப்பினார்கள்.
ஆசிரியர்களிடம், நான் ஆண் சிறைவாசிகள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என கோரினேன். ஆனால், அவர்கள் அதற்கான காரணம் கேட்டனர். என்ன காரணம் கூறினாலும், ஆண் சிறைவாசிகள் இருக்கும் இடத்திற்கு இளம்பெண்களை அனுமதிக்க இயலாது என மறுத்துவிட்டனர்.
ஆகவே, சிறை வரை செல்ல முயன்றும்… தனது விருப்பத்திற்குரிய அந்த நபரை கடைசி வரை சிறையில் காண இயலாமல் போனது” என கூறி இருந்தார் ஜூலியா. மேலும், இந்த நிகழ்வின் மூலம், எக்காரணம் கொண்டும் ஒரு நபரை பின் தொடர வேண்டாம். முக்கியமாக அந்நபர் சிறையில் இருக்கிறார் என்றார், எக்காரணம் கொண்டும் பின்தொடராதீர்கள். முக்கியமாக, ஹைஸ்கூல் பயிலும் காலத்தில், நான் செய்தது போன்ற முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட வேண்டாம் என ஜூலியா தனது வீடியோ பதிவின் இறுதியில் கோரிக்கை வைத்திருந்தார்.