பனை விழுந்து சிறுமி காயம்!

Date:

கடும் காற்று காரணமாக காரைநகரில் பனை மரம் விழுந்து சிறுமியொருவர் காயமடைந்துள்ளார். அவரது வீட்டுக்கு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று நேரில் சென்று சேத விபரங்களை ஆராய்ந்தது.

காற்றினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்து கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு சுயதொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிப்பு தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றார்கள்.

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தலைமையில் யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் நேற்றைய தினம் காரைநகர் பகுதியில் காற்றின் தாக்கத்தினால் பனைமரம் முறிந்து வீட்டின் மேல் விழுந்ததால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் வீட்டுக்கு விஜயம் மேற்கொண்டு சேதமடைந்த வீட்டுக்கு தற்காலிக கூரை விரிப்பினை வழங்கி வைத்ததோடு பாதிப்புக்குரிய நஷ்ட ஈட்டை வழங்குவதற்கான விபரங்களையும் சேகரித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்