சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 500,000 சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்.
நாளை முதல் COVID-19 தடுப்பூசி திட்டத்தில் இவை இணைத்துக் கொள்ளப்படும் என்று ஔடதங்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறினார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்னபுரி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில் மேலும் 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1