கொரோனா தடுப்பூசி போட்ட விவகாரம் தொடர்பாக நயன்தாரா சர்ச்சையில் சிக்கினார். தான் வெளியிட்ட புகைப்படத்தால் இப்படி ஒரு பிரச்சனை ஏற்படும் என்று விக்னேஷ் சிவன் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
கொரோனாவின் இரண்டாம் அலை சுனாமியாக வீசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பலரும் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். திரையுலகை சேர்ந்தவர்கள் தாங்கள் தடுப்பூசி போடும்போது வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, நாங்க ஊசி போட்டாச்சு அப்போ நீங்க என்று கேட்கிறார்கள்.
இந்நிலையில் தான் சென்னையில் இருக்கும் குமரன் மருத்துவமனையில் நயன்தாராவும், அவரின் காதலரான விக்னேஷ் சிவனும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அதை பார்த்து ரசிகர்களும் தடுப்பூசி போடுவார்கள் என்று நம்பி அவர் வெளியிட்டார். ஆனால் அதில் நயன்தாராவின் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தவர்கள், ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டது போன்று நடித்திருக்கிறார் என்று விமர்சிக்கத் துவங்கினார்கள்.
அதை பார்த்த நயன்தாரா தரப்பு விளக்கம் அளித்தது. நர்ஸ் தன் கையால் ஊசியை மறைத்துவிட்டதாக கூறப்பட்டது. ஒரு தடுப்பூசி போடப் போய் இவ்வளவு பெரிய பிரச்சனையில் சிக்கியது நயன்தாரா மட்டும் தான்.
விக்னேஷ் சிவன் பாசமாக வெளியிட்ட புகைப்படத்தால் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று அவரே எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும். இந்நிலையில் நெகட்டிவிட்டியை பரப்புமாறு விக்னேஷ் சிவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கெரியரை பொறுத்த வரை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வந்தார் விக்னேஷ் சிவன். இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இதற்கிடையே கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடையவே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் இருக்கிறார். நயன்தாராவோ, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியுடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். விஸ்வாசத்தை போன்று அண்ணாத்த படத்திலும் நயன்தாராவின் கதாபாத்திரம் கெத்தானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.