கிளிநொச்சி டீ3 கோவிந்தன் கடைச் சந்தி, இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலமாக அடையாளம் காணப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியை சேர்ந்த கே.ரமேஸ்குமார் (30) எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டவர் எனவும், நேற்று (24) மாலை குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கிய போது மரணித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்திசாலைக்கு அனுப்பபடவுள்ளது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
1
+1
1
+1
2