ஒரே நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்; ஆச்சரியப்படுத்தும் சுவாச சோதனை முறை!

Date:

கொரோனாவை விரைவாக கண்டறியும் சுவாச சோதனை முறைக்கு சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிரிதோனிக்ஸ் (Breathonix) ஆகியவை இணைந்து கொரோனாவை கண்டறியும் சுவாச சோதனை கருவியை உருவாக்கியுள்ளன. இது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதைக் கண்டறிய போலீசார் பயன்படுத்தும் கருவியை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் தனது காற்றை வெளிப்படுத்தியதும் அதை சுவாச சோதனை கருவி சேகரித்துக் கொள்ளும்.

பின்னர் உள்ளிருக்கும் மென்பொருள் ஆனது சுவாசத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று கண்டுபிடித்து சொல்லிவிடும். அதாவது வெறும் ஒரு நிமிடத்தில் முடிவுகளை தெரிவித்துவிடுகிறது. அதன்பின்னர் RT-PCR பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும். இந்த கருவியை பயன்படுத்த சிங்கப்பூர் அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

முதல்கட்டமாக சிங்கப்பூர் நாட்டின் எல்லைப் பகுதியான Tuas சோதனைச் சாவடியில் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது பிற நாடுகளில் இருந்து வருவோருக்கு ஆண்டிஜென் ரேபிட் பரிசோதனையை சிங்கப்பூர் அரசு செய்து வருகிறது. இதனுடன் சேர்த்து சுவாச சோதனை முறையும் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூரின் சுற்றுலா துறை பெரிதும் முடங்கியுள்ளது.

இதனை புதுப்பிப்பது பற்றி அந்நாட்டு அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் அதிக நோய்த்தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் சூழலிலும் தனது கதவுகளை திறந்து சுற்றுலாவிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் புதிதாக ஜீரோ கொரோனா பாதிப்புகளை பதிவு செய்து வரும் சிங்கப்பூர் ஏன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டு அரசு யோசனை செய்து வருகிறது. அதேசமயம் ஒட்டுமொத்தமாக கதவுகளை திறந்து மீண்டும் வைரஸ் தொற்று உச்சத்திற்கு சென்றுவிடக் கூடாது என்ற கவனமாக இருக்க விரும்புகிறது. எனவே படிப்படியாக வெளிநாட்டு பயணிகளை அனுமதிக்க சுவாச சோதனைக் கருவி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்