உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியுடன் ஆல் ரவுண்டர் ஜடேஜா இணைந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இந்தப் போட்டி தொடருக்கு பிறகு இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.
இதற்காக, இந்திய வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த வாரம் அஸ்வின், முகமது சிராஜ், மயங்க் அகர்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மும்பை சென்றடைந்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியுடன் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் மும்பையில் இணைந்து கொண்டார். இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.