பள்ளிக்கூட பீஸ் கட்ட முடியாததால் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானையும் அவரது தாயாரையும் பிரபல பள்ளி தரக்குறைவதாக பேசியதாக பேட்டி ஒன்றில் அவர் கூறிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான செய்தி சமூகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜகோபாலனை கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்
ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய பழைய காணொளி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரஹ்மான், தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இதுவரை சுமார் 125 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலம் மற்றும் சீன மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய காணொளி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2012ஆம் ஆண்டு இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை பிரபல பத்திரிக்கையாளர் சிமி கார்வால் நேர்காணல் செய்தார். அதில் தனது தந்தை மறைவுக்கு பிறகு இளம் வயதில் தான் சந்தித்த கொடுமைகளை பற்றி பேசிய ரஹ்மான், அடிக்கடி பள்ளிக்கு லீவ் போட்டதால், ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து கொண்டு வருமாறும், அதன்பிறகு அவர் அந்த ஸ்கூலில் இருந்து பாதியிலே படிப்பை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
#PSBB to @arrahman and his mom.
From such a difficult childhood to a self made legend. 🙏 https://t.co/5PNp82mOKS pic.twitter.com/Dk3HWjqUOP
— tro lee (@trolee_) May 24, 2021
மேலும், அந்த வீடியோவில், உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் தெரு தெருவாக அலையுங்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது பணம் கொடுக்கலாம் என கூறியதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான். ஆனால் அது எந்த பள்ளி என்று அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்து பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகள் தான் ஏ.ஆர்.ரஹ்மானை அவமதித்திருக்ககூடும் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின் படி, மேலும் பல ஆசிரியர்கள் பாலியல் வழக்கில் சிக்குவார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்களால் பாதிக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட மாணவிகள், தாங்களாக புகார் அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.