தமிழத்தின் பல வீடுகளிலும் பாசிப்பயறு மிகவும் பிரபலம். வாரம் ஒருமுறையேனும் நம் அம்மக்கள் பாசிப்பயறை அவிய வைத்தோ இல்லை பொரியல் செய்தோ அல்லது கடைசல் ஆகவோ கண்டிப்பாக செய்து கொடுத்து விடுவார்கள். நம்மில் பலருக்கும் சிறு வயதில் பாசிப்பயறு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், பெரியவர்களாக ஆன பிறகு அது சத்தான உணவு என்பதை புரிந்துக்கொண்டு நாமே சாப்பிட ஆரம்பித்திருப்போம். சரி, உண்மையிலே இதில் அப்படியென்ன சத்துக்கள் எல்லாம் இருக்கிறது?
பாசிப்பயரில் கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிக அளவில் உள்ளது. புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஒரு சிறிய அளவு இரும்புச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நார்ச்சத்து மற்றும் தாது சத்துக்களும் இதில் உள்ளது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாசிப்பயறை நன்கு வேகவைத்துக் கொடுக்கலாம். ஏனெனில், வேகவைத்த பாசிப்பயறு எளிதில் ஜீரணமாகக்கூடியது. இது போன்று கருவுற்றிருக்கும் சமயத்தில் பாசிப்பயறு சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்கள் நேரடியாக கருவுக்குச் செல்கின்றன.
கருவில் உள்ள குழந்தைக்கு மட்டுமல்லாமல், சிறிய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பயறு ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரியவர்களும் இதை சாப்பிடலாம். வயிற்று வியாதி உள்ளவர்கள் சூப் போன்ற வேகவைத்த பாசிப்பயறு தண்ணீரை குடிக்கலாம். இது வயிற்று பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.
பெரியம்மை மற்றும் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாசிப்பயறு ஊறவைத்த தண்ணீரைக்கொடுக்கலாம். அதேபோல், காலரா, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களைக் குணப்படுத்துவதிலும் பாசிப்பயறு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
கோடைகாலத்தில் மனத்தக்காளி கீரையோடு பாசிப்பயரையும் சேர்த்து கடைந்து சாப்பிட்டால், அடடா ருசியும் வேற லெவெலில் இருக்கும் அதே போல உடல் வெப்பம் தணிந்து வியாதிகளும் குணமடையும். ஆசனவாய் பிரச்சினை, மூலம் போன்ற வியாதிகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாக அமையும்.
அரிசியுடன் பாசிப்பயறை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் பித்தம் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்த முடியும். வல்லாரை கீரையுடன் பாசிப்பயறைகிச் சேர்த்து சமைத்தால், நினைவாற்றல் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர.
ஆரோக்கியம் மட்டுமல்ல அழகுக்கும் இது ரொம்ப நல்லது. குளிக்கும் போது சோப்புக்கு பதிலாக பச்சைப்பயறு தேய்த்து குளித்தால் சருமம் அழகாக இருக்கும். சீயக்காயைப் போல தலைக்குத் தேய்த்து குளித்தால் பொடுகு பிரச்சினையும் நீங்கும்.