கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – மாடர்னா நிறுவனம்

Date:

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஃபைசர், அஸ்ட்ராஜெனகா, மாடர்னா, ஸ்புட்னிக்,
கோவாக்சின் என பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் ஆபத்து அதிகமானோருக்கு மூன்று டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டுமென மாடர்னா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஸ்டிபானி பான்செல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “குறிப்பிட்ட காலத்துக்கு எங்கள் தடுப்பூசி சக்திவாய்ந்ததாக இருக்கும் என நம்புகிறோம். புதுப்புது ஊருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவத் தொடங்குவது அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அனைத்து மக்களுக்கும் மூன்றாம் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என நம்புகிறோம்.

இன்னும் தடுப்பூசி போடாமல் இருக்கும் நபர்களை பாதுகாக்க அனைத்து வயது வந்தவர்களும், சிறுவர்களும் மூன்றாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தாமதம் ஏற்பட்டால் கொரோனா பாதிப்பு மேலும் உயரும்” என்று எச்சரித்துள்ளார்.

இதுவரை உலகளவில் சுமார் 9 கோடி பேருக்கு மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சுமார் 14 விழுக்காட்டினருக்கு இரண்டு டோஸ் மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தது 3.15 கோடி பேருக்காவது ஒரு டோஸ் மட்டும் போடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்