இந்தியா

இந்தியா- சீனா இடையே மீண்டும் மோதலா? ; இந்திய ராணுவம் விளக்கம்!

இந்தியா – சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், இதுவரையில் முழு தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், மே மாதம் முதல் வாரத்தில் இந்தியா – சீனா இடையே மீண்டும் சிறு மோதல் ஏற்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே மே மாதம் முதல் வாரம் சிறு மோதல் நடைபெற்றதாக தகவல்கள் பரவி வருகின்றன.

மே மாதம் முதல் வாரம் அப்படி எந்த மோதலும் நடைபெறவில்லை. கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை கெடுக்கவே இதுபோன்ற பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல்; உள்துறைச் செயலர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

பொலிசாரின் காலில் விழுந்து கதறி அழுத பப்ஜி மதன்!

Pagetamil

அம்மா தங்கையின் குளியலறை வீடியோவை காதலனுக்கு அனுப்பிய பெண்.. விசாரணையில் வெளியான கேவலமான செயல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!