லெஜண்ட் சரவணன் ஜோடியாக நடிக்கும் ஊர்வசி ரவ்தெலா ; 2 கோடி சம்பளமாமே!

Date:

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் பற்றி அறிந்து பலரும் வியந்து போயிருக்கிறார்கள்.

தொழில் அதிபர்கள் தங்கள் கடை விளம்பரங்களில் நடிக்கத் துவங்கிவிட்டனர். அப்படி விளம்பர படத்தில் நடிக்க வந்தவர் தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜண்ட் சரவணன். அவர் தமன்னா, ஹன்சிகாவுடன் சேர்ந்து விளம்பர படத்தில் வந்ததை பார்த்து வயித்தெரிச்சல் அடைந்தவர்கள் பலர்.

இந்நிலையில் நானும் எத்தனை நாள் தான் இப்படியே இருப்பது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். லெஜண்ட் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கி வருகிறார்கள்.

என் கிட்ட இல்லாத காசா, பணமா என்று ரூ. 200 கோடியை கொட்டி படத்தை தயாரித்து நடித்து வருகிறார் லெஜண்ட். அவருக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்டபோது அப்பா வயசுக்காரருடன் நடிக்க முடியாது என்று தெறித்து ஓடிவிட்டனர்.

இந்நிலையில் கவர்ச்சிக்கு பெயர் போன பாலிவுட்டில் கூடுதல் கவர்ச்சி காட்டும் ஊர்வசி ரவ்தெலாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார்கள். மணாலியில் நடந்த படப்பிடிப்பின்போது லெஜண்ட், ஊர்வசி ரொமான்ஸ் செய்த காட்சிகளை படமாக்கினார்கள்.

இளம் நடிகையான ஊர்வசி லெஜண்டுடன் ஜோடி போட்டிருக்கிறார் என்றார் சம்பளம் வெயிட்டாக கிடைத்திருக்கும் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் லெஜண்டுக்கு ஹீரோயினாக நடிக்க ஊர்வசிக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

ஊர்வசியின் சம்பள விபரம் அறிந்த பிற நடிகைகளோ அடடா ரூ. 2 கோடி போச்சே என்று ஃபீல் பண்ணுகிறார்களாம். பெருசா ஒரு தொகையை வாங்கிக் கொண்டுவிட்டு ஐஐடியில் படித்தவளாக நடிக்கச் சொன்னதால் தான் லெஜண்ட் படத்திற்கு ஓகே சொன்னதாக ஊர்வசி தெரிவித்தார். அவர் கூறிய காரணத்தை கேட்டு சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்தது தான் மிச்சம்.

நான் ஏன் லெஜண்ட் பட ஹீரோயின் ஆனேன் தெரியுமா?: ஊர்வசி ரவ்தெலா
கொரோனாவின் இரண்டாம் அலை சுனாமியாக மாறிவிட்டதால் லெஜண்ட் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளனர்.முன்னதாக சென்னையில் ஷூட்டிங் நடந்தபோது லெஜண்டும், ரஜினியும் சந்தித்துக் கொண்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்