பிக் பாஸ் புகழ் நடிகர் ஜித்தன் ரமேஷ் கொரோனா லாக்டவுனில் வீட்டு வேலைகளை செய்திருக்கிறார். அதுவும் நடனம் ஆடிக்கொண்டே.
ஜித்தன் படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரமேஷ். நடிகர் ஜீவாவின் சகோதரர் தான் அவர். பெரிய தயாரிப்பாளரின் மகன் என்பதால் முதல் வாய்ப்பு எளிதில் வந்திருக்கலாம் ஆனால் அதற்குப்பிறகு சினிமா துறையில் அதிகம் தோல்விகளை தான் சந்தித்ததாகவும், அவமானங்களையும் சந்தித்ததாகவும்
பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது ஜித்தன் ரமேஷே கூறினார்.
பிக் பாஸ் நான்காவது சீசனில் ஜித்தன் ரமேஷை வைத்து தான் அதிக அளவு மீம்கள் வந்திருக்கும். எல்லோரும் எதாவது காரணத்திற்காக சண்டை போட்டுக்கொண்டிருந்தால் இவர் மட்டும் கூலாக படுத்திருப்பார். அவரது ரியாக்ஷன்கள் அனைத்தும் மீமாக இணையத்தில் உலா வந்ததையும் நாம் பார்த்தோம்.

ஜித்தன் ரமேஷ் பிக் பாஸுக்கு பிறகு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக எந்த ஷூட்டிங்கும் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் ஜித்தன் ரமேஷ் தனது வீட்டில் தரையை துடைப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வது போல டான்ஸ் ஆடி இருக்கிறார். எந்த வேலை செய்பவராக இருந்தாலும் மதிக்கவேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.




