தொண்டமானாறு கடலின் ஊடாக கொண்டு வரப்பட்ட 131.8 கிலோ கஞ்சாவை ஊரிக்காட்டு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை குறித்த கடல் பரப்பின் ஊடாக கொண்டுவரப்பட்டு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினரால் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1