லாஸ்லியாவிடம் ஏடாகூடமான கேள்வி கேட்ட ரசிகர்!

Date:

இலங்கை தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friednship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார். அவரது தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டதால் வெளியே வராமல் இருந்தார். தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கியுள்ளார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இப்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் லாஸ்லியா, இயல்பான வெள்ளை நிற சேலையிலும் அழகாக மின்னுகிறார்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் “ஏன் நீங்களும் அஸ்வினும் மேரேஜ் பண்ணிக்க கூடாது?” என்று கேள்வி கேட்க, அப்படியே இன்னொரு ரசிகர் “நீங்கள் கவின் கூட இருக்கும் போது ரொம்ப அழகாக இருந்தீர்கள், பட்…?”என்று கேள்விக்குறியோடு கமெண்ட் அடித்துள்ளார்.இதில் குக் வித் கோமாளி அஸ்வினுடன் ஏற்கனவே ஒரு விளம்பரப் படத்தில் லாஸ்லியா நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

spot_imgspot_img

More like this
Related

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...

அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு...

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்