கிளிநொச்சியில் இதுவரை 452 கொரோனா தொற்றாளர்கள்!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 452 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது எனவே மக்கள் அதிகளம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் இது காலத்தின் கட்டாயம் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 452 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 400 பேர் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 52 பேர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். இதேவேளை நேற்றைய தினம் (சனிக் கிழமை) 36 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரைச்சி மருத்துவ அதிகாரி பிரிவில் 24 பேரும் பளையில் ஒருவர் பூநகரியில் மூவர் கண்டாவளையில் எட்டு பேர் காணப்படுகின்றனர்.

அத்தோடு 1160 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை இரண்டு மரணங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே மக்கள் அதிகம் விழிப்புணர்வுடன் அவதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். சுகாதார வழிமுறைகளை பின்பற்றியும் செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

சுகாதார திணைக்களத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது. தற்போது இதனடிப்படையில் 1372 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

spot_imgspot_img

More like this
Related

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்