சட்டமா அதிபர் திணைக்கள நினைவுக்கல்லிலும் சிங்களம், சீனம்: தமிழை காணோம்!

Date:

இலங்கையில் அண்மைக்காலமாக தமிழ் மொழியின் இடத்தை சீன மொழி ஆக்கிரமிக்கும் தொடர் நிகழ்வாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டிடத்திலும் தமிழை விழுங்கியுள்ளது சீன மொழி.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய மின் நூல் நிலைய திறப்பு விழா புகைப்படங்கள் வெளியாகி இந்த சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.

சீன தூதரகத்தின் நிதியுதவில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை சட்டமா அதிபரும், சீன தூதரும் இணைந்து திறந்து வைத்தனர்.

நினைவுக்கல்லில் சிங்கள, சீன மொழி வாசகங்கள் மட்டுமே உள்ளன. தமிழ், ஆங்கிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

அண்மைய நாட்களில் சீனாவுடன் தொடர்புடைய விளம்பர பலகைகளில் சிங்களமும், சீன மொழியும் மட்டுமே இடம்பெறுகிறது.

அண்மையில் துறைமுக நகரத்திலுள்ள இதேபாணி விளம்பர பலகைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போது, இலங்கை அரசு சார்பில் பதிளிக்கப்படாததையும், சீன தூதரகமே அதற்கு பதிலளித்ததையும் நாடாளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

 

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்